search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்பியன்ஸ் லீக்"

    • இரு அணிகளும் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கவில்லை.
    • 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி அபாரமான கோல் அடித்தார்.

    இஸ்தான்புல்:

    ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சார்பில் ஆண்டுதோறும் கிளப் அணிகளுக்கிடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.

    அவ்வகையில், இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டாடர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மான்செஸ்டர் சிட்டி, இன்டர் மிலன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இரு அணிகளுமே எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து கோல் அடிக்க முயன்றன. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கப்படவில்லை. 

    இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி முன்னேறியது. 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி, எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து அபாரமான கோல் அடித்தார். இதன்மூலம் மான்செஸ்டர் சிட்டி 1-0 என முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. அதன்பின்னர் இன்டர் சிட்டி அணி பதிலடி கொடுக்க முயன்றும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் கிளப் தொடங்கிய 143 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது.

    சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் லெக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டை 2-0 என வீழ்த்தியது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். #PSG
    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு அணிகளும் தங்களுடைய சொந்த மைதானத்தில் தலா ஒருமுறை மோத வேண்டும். இரண்டு போட்டியில் அதிக கோல் அடிக்கும் அணி காலிறுதிக்கு முன்னேறும்.

    இன்று நடைபெற்ற முதல் லெக் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் - பி.எஸ்.ஜி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெய்மர், கவானி இல்லாமல் பி.எஸ்.ஜி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.



    2-வது பாதி நேரத்தில் பி.எஸ்.ஜி. வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 53-வது நிமிடத்தில் அந்த அணியின் ப்ரெஸ்னெல் கிம்பெம்பே முதல் கோல் அடித்தார். 60-வது நிமிடத்தில் கிலியான் மப்பே ஒரு கோல் அடித்தார். இதனால் பி.எஸ்.ஜி. 2-0 என முன்னிலை பெற்றது. இதற்கு மான்செஸ்டர் அணியால் பதில் கோல் அடிக்க இயலவில்லை. ஆகவே பி.எஸ்.ஜி. 2-0 என வெற்றி பெற்றது.
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட்டை 3-0 என சிஎஸ்கேஏ மாஸ்கோ பந்தாடி அதிர்ச்சி அளித்துள்ளது. #ChampionsLeague
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ‘ஜி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ரியல் மாட்ரிட் தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோவை எதிர்கொண்டது. ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோ அணி ஆச்சர்யம் அளிக்கும் வகையில் விளையாடியது.

    ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் சாலோவ், 43-வது நிமிடத்தில் ஜியோர்ஜி ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். இதனால் முதல் பாதி நேரத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோ 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    2-வது பாதி நேரத்திலும் சிஎஸ்கேஏ மாஸ்கோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரியல் மாட்ரிட் அணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் சிறப்பான வகையில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் அர்னோர் ஒரு கோல் அடிக்க சிஎஸ்கேஏ மாஸ்கோ 3-0 என ரியல் மாட்ரிட்டை துவம்சம் செய்தது.



    ரியல் மாட்ரிட் தோல்வியடைந்தாலும் ‘ஜி’ பிரிவில் 6 போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்ததோடு, நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரோமா 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனாவிற்கு எதிரான ஆட்டத்தை 1-1 என டிரா செய்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது டோட்டன்ஹாம் #Barcelona
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ‘பி’ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் பார்சிலோனா - டோட்டன்ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏற்கனவே பார்சிலோனா நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. டோட்டன்ஹாம் வெற்றி அல்லது டிரா செய்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற நிலையில் களம் இறங்கியது.

    ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ஓஸ்மானே டெம்பேல் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பார்சிலோனா முதல்பாதி நேரத்தில் 1-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்திலும் டோட்டன்ஹாம் அணியால் நீண்ட நேரம் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில்தான் லூகாஸ் மவுரா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை ஆனது. பின்னர் ஆட்டம் முடியும்வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

    பார்சிலோனா நான்கு வெற்றி, இரண்டு டிராவுடன் 14 புள்ளிகள் பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. டோட்டன்ஹாம், இன்டர் மிலன் அணிகள் 6 போட்டிகளில் தலா இரண்டு வெற்றி, டிரா, தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்றது. கோல் அடித்தது, கோல் விட்டுக் கொடுத்ததிலும் சமமாக இருந்தது. அவர்களுக்கிடையிலான ஆட்டத்தை கணக்கிட்டு டோட்டன்ஹாம் 2-வது இடம் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
    ரொனால்டோவுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் மைதானத்திற்குள் படையெடுத்தனர். ஆனால் ஒருவருக்கே அதிர்ஷ்டம் கிடைத்தது. #Ronaldo
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தின் முன்னணி அணியான மான்செஸ்டர் யுனைனெட் அணியும், இத்தாலியின் முன்னணி அணியான யுவான்டஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

    இந்த ஆட்டம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது. மான்செஸ்டர் அணிக்கான நீண்ட காலம் விளையாடியவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு சென்றார். தற்போது யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    பழைய கிளப் உடன் மோதுவதற்கான ரொனால்டோ ஓல்டு டிராஃபோர்டிற்குச் சென்றார். ரொனால்டோவை காண மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். நேற்றிரவு நடைபெற்ற மான்செஸ்டர் அணிக்கெதிரான ஆட்டத்தில் யுவான்டஸ் 1-0 என வெற்றி பெற்றது.



    ஆட்டம் முடிந்ததும் ரொனால்டோ மைதானத்தில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் ரொனால்டோவுடன் செல்பி எடுக்க மைதானத்திற்குள் நுழைந்தனர்.

    அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை பிடித்து வெளியேற்றினார். ஒரு ரசிகர் மட்டும் ரொனால்டோவை நெருங்கினார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்தனர். அந்த நேரத்தில் ரொனால்டோ ரசிகரின் செல்லை வாங்கி, அவருடன் செல்பி எடுத்து, அதன்பின் செல்லை ரசிகரிடம் வழங்கினார். ரொனால்டோ செல்லை வாங்கி செல்பி எடுத்த சந்தோசத்தில் அந்த ரசிகர் வெளியேறினார்.
    சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் கால்பந்து தொடரில் கூடுதல் நேரத்தில் நான்கு மாற்று வீரர்களை களம் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #UEFA
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் நாக்அவுட் சுற்றுகள் முடிவடைந்து நாளை காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

    நாக்அவுட் சுற்று போட்டிகளில் ஆட்டத்தின் 90 நிமிடத்தில் போட்டி சமநிலையில் இருந்தால் கூடுதல் நேரம் வழங்கப்படும். இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடங்கள் கொடுக்கப்படும். முதல் 15 நிமிடத்தில் சமநிலையாக இருந்தால், 2-வது 15 நிமிடம் வழங்கப்படும். இந்த 30 நிமிடங்களிலும் இரு அணிகளும் சமமான வாய்ப்பு பெற்றிருந்தால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.



    இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன் மூன்று வீரர்களுக்குப் பதில் மாற்று வீரர்களை ஒரு அணி களம் இறக்கலாம் என்ற விதிமுறை இருந்தது. தற்போது இந்த உலகக்கோப்பையில் 90 நிமிடத்திற்குப் பிறகு கூடுதல் நேரம் ஆட்டம் நடைபெற்றால் நான்கு வீரர்களை மாற்றிக்கொள்ளலாம் என்று பிபா விதிமுறையை மாற்றியுள்ளது.

    இந்நிலையில் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் சாம்பியன்ஸ் லீக் மற்றும் யூரோப்பா லீக் தொடரின் நாக்அவுட் சுற்றில் இதுபோன்று நான்கு வீரர்களை மாற்ற சம்மதம் தெரிவித்துள்ளது. #UEFA #ChampionsLeague #EuropaLeague
    சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் முகமது சாலா காயத்திற்கு காரணமான செர்ஜியோ ரமோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
    யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமை நள்ளிரவு உக்ரைனில் நடைபெற்றது. இதில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காரேத் பேலே இரண்டு கோலும், பென்சிமா ஒரு கோலும் அடித்தனர். லிவர்பூல் ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 3-1 என வெற்றி பெற்று தொடர்ச்சியாக 3-வது முறை கோப்பையை கைப்பற்றியது.

    போட்டியின் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் அணியின் முன்னணி வீரரான முகமது சாலா பந்தை கோல் நோக்கி கடத்திச் சென்றார். அப்போது ரியல் மாட்ரிட் கேப்டனும், பின்கள வீரரும் ஆன செர்ஜியோ ரமோஸ் சாலாவின் கோல் முயற்சியை தடுக்க அவருடன் மோதிக்கொண்டே பந்தை தடுக்கச் சென்றார்.



    அப்போது ரமோஸ் கைக்குள் சாலா கை மாட்டியது. அப்போது சாலாவை ரமோஸ் தள்ளியதால் சாலா கீழே விழுந்தார். இதில் சாலாவின் வலது கை தோள்பட்டை பலமாக தரையில் சென்று தாக்கியது. இதனால் சாலா வலியால் துடித்தார். பின்னர் சிறிது நேரம் விளையாடிய பின்னர் வலி தாங்க முடியாமல் வெளியேறினார். ஆனால் ரமோஸிற்கு நடுவர் எந்த தண்டனையும் வழங்கவில்லை.

    இதனால் லிவர்பூல் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர். அத்துடன் அமெரிக்காவில் பாதிப்படைந்த மக்களுக்காக உதவும் சேஞ்ச்.ஓர்ஜி (Change.org) என்ற இணைய தளத்தில் பிபா மற்றும் யூஈஎஃப்ஏ செர்ஜியோ ரமோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 3 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி லிவர்பூல் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. #2018UEFAChampionsLeague
    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் கீவ் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணியும், லிவர்பூல் (இங்கிலாந்து) அணியும் மோதின.

    போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அபாரமாக ஆடின. இதனால் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.



    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா முதல் கோல் அடித்தார். இதற்கு  பதிலடி கொடுக்கும் வகையில் லிவர்பூல் அணியின் சாடியோ மேன் 54-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

    தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணி சிறப்பாக ஆடியது. அந்த அணியின் கரேத் பாலே 63 மற்றும் 82 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது. #2018UEFAChampionsLeague
    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் இன்று இரவு கீவ் நகரில் மோதுகின்றன. #2018UEFAChampionsLeague
    இந்த சீசனுக்கான ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் (ஸ்பெயின்)- லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகள் இன்று இரவு கீவ் நகரில் மோதுகின்றன. ரியல்மாட்ரிட் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக கோப்பைக்கு முன்பாக நடக்கும் மிகப்பெரிய போட்டி இதுவாகும். இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #2018UEFAChampionsLeague
    ×